10 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்..!! பதறிய காவலர்கள்.! சற்று நேரத்தில் தட்டி தூக்கிய போலீசார்!

10 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்..!! பதறிய காவலர்கள்.! சற்று நேரத்தில் தட்டி தூக்கிய போலீசார்!


police-r9jy9b

விழுப்புரம் எஸ்.பி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியால் சற்று நேரம் காவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிடங்களைச் சேர்ந்தவர் அஜய் (வயது 23). இவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர், மது அருந்திய நிலையில் நேற்று முன் தினம் விழுப்புரம் எஸ். பி காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த வெடிகுண்டு இன்னும் 10 நிமிடத்தில் வெடித்துவிடும் எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிசார், இந்த தொலைபேசி எண் யாருடையது, எந்த இடத்திலிருந்து அழைப்பு வந்தது என்பதனை ஆய்வு செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிடங்களைச் சேர்ந்த குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் உள்ள அஜய் என்ற ஆசாமி மது போதையில் பொய் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. பின்னர் போலிசார், மிரட்டல் விடுத்த ஆசாமியை வெளுத்து வாங்கி அதிரடியாக கைது செய்தனர்.