தமிழகம்

பேரு ரஞ்சித்.. பாக்குறது போலீஸ் வேல..!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! சினிமா பாணியில் நடந்த சம்பவம்..

Summary:

திருடனிடம் இருந்து பணத்தை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருடனிடம் இருந்து பணத்தை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சின்னகானூரில் உள்ள இரும்பு ஆலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சிலர் இரும்பை திருடி ஆனந்தன் என்ற வியாபாரிடம் விற்றுள்ளனர். இந்த வழக்கில் இரும்பை திருடியவர்கள் மற்றும் திருடிய இரும்பை வாங்கிய ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த ஆனந்தனிடம் அவரது ஏ.டி.எம் கார்டு, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை ரஞ்சித் என்ற காவலர் பெற்றுள்ளார். சில நாட்களில் ஆனந்தன் ஜாமினில் வெளிவந்து, தனது வங்கி கணக்கை சோதனை செய்தபோது, அதில் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்ததில் காவலர் ரஞ்சித்துதான் பணத்தை எடுத்து தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆனந்தன் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காவலர் ரஞ்சித்துதான் பணத்தை எடுத்ததை உறுதி செய்தனர். இந்நிலையில் காவலர் ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement