ஆசையாக மாமியார் வீட்டிற்கு சென்ற கணவன்.! குடும்பமே செருப்பால் அடித்த கொடூரம்.! கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு.!

ஆசையாக மாமியார் வீட்டிற்கு சென்ற கணவன்.! குடும்பமே செருப்பால் அடித்த கொடூரம்.! கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு.!


Police man escape from home

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பத்து வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

திருமணமான சிறிது நாட்களில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இவர் சென்னையில் இருந்து கடந்த ஆறாம் தேதி நட்டாலத்தில் உள்ள மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அவரது மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அவரது சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜினிகுமார் வீட்டிற்கு வந்து சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார்.

Husband

அந்த கடிதத்தை ஜினிகுமாரின் தந்தை எடுத்து பார்த்தபோது அதில், நிறைய குடும்ப விஷயங்களை பற்றி எழுதியுள்ளார். மேலும், நான் எனது மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றேன், அப்போது மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கி செருப்பால் அடித்து அவமானப்படுத்தினர். இதனால், தான் வாழ்கையை முடித்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு மாயமாகியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் தனது சொத்துக்கு தந்தைக்கே சட்டபூர்வ உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.