கந்துவட்டி கொடுமையால் பயங்கரம்.. பெண் தீக்குளித்த வழக்கில் தம்பதிகள் கைது.!Police investigated women attempt suicide case

கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சித்ரா. இவர் ரெங்கநாயகி என்பவரிடம் கந்துவட்டிக்கு 4லட்சம் பணம் வாங்கிய நிலையில், வட்டியை சரியான முறையில் திருப்பி செலுத்தாததால் 30 லட்சம் உயர்ந்து விட்டதாக ரெங்கநாயகி தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் வீட்டை எழுதித் தருமாறு 2 பேருடன் வந்து மிரட்டியதால், பயந்துபோன சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.chennaiஇதன் பின் காவல்துறையினர் விசாரணையின் போது சித்ரா, 'ரெங்கநாயகி மற்றும் அவரது கணவர், அவரது மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து வீட்டை எழுதி தரும்படி தன்னை மிரட்டியதாகவும், அதனால் பயந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்'.

பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது ரங்கநாயகி மற்றும் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் சித்ராவின் வாக்குமூலத்தை வீடியோ ஆதாரமாகக்கொண்டு காவல்துறையினர் தம்பதிகளிடம் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.