இன்ஸ்டாவில் பழகி சிறுமிடம் அத்துமீறல்.. தாய் - மகன் நண்பர்களாக சிறுமிக்கு அரங்கேற்றிய கொடூரம்..! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

இன்ஸ்டாவில் பழகி சிறுமிடம் அத்துமீறல்.. தாய் - மகன் நண்பர்களாக சிறுமிக்கு அரங்கேற்றிய கொடூரம்..! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!


police investigated instagram love issue

இன்ஸ்டாகிராமில் சிறுமியிடம் பழகி ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள நகைபறித்த நாடகக்காதலன் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மதுரையில் உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்த சிறுமி, மதுரை கோ.புதூர் பகுதியைச் சார்ந்த பயாஸ்கான் என்ற இளைஞரிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், சிறுமியை காதலிப்பதாக கூறிய பயாஸ்கான் நேரில் சந்திப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வருகிறது. 

இதனை வைத்து ஏராளமான பணத்தை கரக்க தொடங்கிய நிலையில், தான் ஊர் சுற்றுவதற்கு விதவிதமான ஆடைகள், படிப்பு செலவிற்கு என சிறுமியிடம் பணத்தைக் கரந்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், சிறுமியிடம் பேசி அவரின் வீட்டில் உள்ள 10 பவுன் தங்கச் செயினை எடுத்து வரவும் ஐடியா கொடுத்துள்ளார். 

சிறுமி நகையை எடுத்து வந்தபின் பயாஸ்கான் தனது நண்பர்கள் சதீஷ் மற்றும் சரவணகுமார் ஆகியோரின் உதவியுடன் தனியார் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சத்திற்கு அடமானம் வைத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். இந்த விஷயத்திற்கு சரவணக்குமாரின் தாயார் முத்துலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். 

அதற்கு ரூ.50,000 அவருக்கு பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் தங்கசெயின் காணாமல் போனதால் பெற்றோர்கள் விசாரிக்க, சிறுமி நடந்ததை கூறியுள்ளார். மகள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்த சிறுமியின் தாயார் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பயாஸ்கான், அவரின் நண்பர்கள் சதீஷ், சரவணகுமார், தாயார் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 10பவுன் தங்கச்சங்கிலியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பை, காதல் என நம்பினால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.