தமிழகம்

வீடியோ: டேய்.. எங்கடா ஓடுற.. தலைதெறிக்க ஓடிய திருடன்.. பின்னாடியே ஓடிய காவலர்.. பரபரப்பு காட்சி..

Summary:

செல்போன் திருடனை தலைமை காவலர் ஒருவர் துரத்திச்சென்று பிடித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

செல்போன் திருடனை தலைமை காவலர் ஒருவர் துரத்திச்சென்று பிடித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கோவை மாவட்டம் அன்னூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருடன் ஒருவன் செல்போனை திருடிவிட்டு தப்பித்து ஓட முயன்றுள்ளான். அப்போது அந்த பகுதியில் நின்றுகொட்டிருந்த தலைமை காவலர் மணிகண்டன் என்பவர் திருடன் செல்போன் திருடிக்கொண்டு ஓடுவதை பார்த்ததும், திருடனை பிடிப்பதற்காக விரட்டி சென்றுள்ளார்.

ஒருகட்டத்தில் திருடன் வேகமாக ஓடவே, அவன் பின்னால் ஓடிக்கொண்டிருந்த தலைமை காவலர் மணிகண்டன் நிலைதடுமாறி கீழே விழுகிறார். அப்போது லாவகமாக திருடனின் கால்களை பிடித்து, திருடனையும் அவர் கீழே சாய்த்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகி இருந்தநிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. வீடியோவை பார்த்த பலரும் காவலருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement