தமிழகம்

மாநகராட்சி ஊழியர்கள் உடையில் மதுபானம் கடத்திய 2 வழக்கறிஞர்கள்! போலீசாரின் அதிரடி!

Summary:

police caught dring theft

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்தநிலையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தளர்வுகளுடன் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சென்னை எண்ணூர் அத்திப்பட்டு மேம்பாலம் அருகே எண்ணூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருச்சக்கரவாகனத்தில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அணியும் சீருடை அணிந்திருந்தார். 

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அவர்களது இருசக்கர வாகனத்தில் 36 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர்கள் வழக்கறிஞர்கள் என்பது தெரிந்தது. 

இருவரும் மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகவும், போலீசார் தங்களை சோதனை செய்யாமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் அணியும் உடை அணிந்து சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.


Advertisement