ஹெல்மெட் அணியாத வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்! நீதிபதி அதிரடி உத்தரவு!

ஹெல்மெட் அணியாத வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்! நீதிபதி அதிரடி உத்தரவு!


police attacked lawer

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டி வழக்கறிஞரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமைக்காவலர்கள் இருவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு தலா 1001 ரூபாயை வரைவோலை எடுத்து வழங்கவும்,  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த வேலுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக இருந்துவந்துள்ளார். இவர் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கூறி போலீசார் தடுத்தி நிறுத்தி அங்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலுசாமியை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் வேலுசாமிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, தலைமை காவலர்கள் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. 

Helmet

இந்த நிலையில் இன்று காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம்,ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்ய விதியுள்ளதா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் 1 மணிக்குள்ளாக அவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்கறிஞரைத் தாக்கியதற்காக அவர்கள் இருவரும் மன்னிப்பு கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா ஆயிரத்து ஒரு ரூபாயை வரைவோலையாக எடுத்துக் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.