தமிழகம்

மனைவியின் நிர்வாண புகைப்படம் வேண்டுமா..? அப்பாவி பெண்களின் கணவன்களுக்கு மனைவியின் ஆபாச புகைப்படத்தை அனுப்பி விலை பேசிய இளைஞர்..!

Summary:

Police arrested young boy who create morphing photos

பெண் ஒருவரின் ஆபாச புகைப்படத்தை கணவனுக்கு அனுப்பி விலை பேசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் போலீஸ் எஸ்பி வருண் குமாருக்கு நபர் ஒருவர் போன் செய்து தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும், மேலும் பரப்பாமல் இருக்க 20 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

இதனை அடுத்து களத்தில் இறங்கிய போலீசார் பரமக்குடி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் ரோஹித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இதுபோன்று பலரிடம் ஆபாச புகைப்படங்களை அனுப்பி, மிரட்டி பணம் பறித்துவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் இருந்து செல்போன், மார்பிங் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் போன்றவரை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement