
Police arrested mylapore tasmac theft accused
சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 7 வருடமாக கொள்ளையடித்து, கோடீஸ்வரனாக மாறிய வேலூரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.
சமீபாத்தில் சென்னை மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் சுவரில் ஓட்டைபோட்டும், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடை உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து மைலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த பகுதிகளில் உள்ளே சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா அணிந்து கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது. பின்னர் டாஸ்மாக்கில் இருந்து மயிலாப்பூர் குளக்கரை பஸ் நிலையத்திற்கும், அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் செல்வதை பல்வேறு சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், கொள்ளையன் சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் செல்வதை போலீசார் உறுதிப்படுத்தினர். பின்னர் அந்த வழித்தடத்தில் உள்ளே அணைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள திரையரங்கின் பின்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு நடந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த பகுதியில் கொள்ளையன் உள்ளே சென்ற வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், வேலூரை சேர்ந்தவர் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனை அடுத்து வேலூர் சென்ற போலீசார் அங்கு நடத்திய தீவிர வேட்டையில் ஹோட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக வேலை செய்த கொள்ளையன் குபேரன் என்ற சிவாவை(42) போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிழிந்த சட்டையுடன் தோசை மாஸ்டராக வேலை செய்ததும், கொள்ளையடித்த பணத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து 13,40,000 ரூபாயை போலீஸார் மீட்டனர்.
கொள்ளையடிக்கும் போது தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் குபேரன். இதனாலயே இதனை வருடங்களாக அவரை பிடிப்பதில் சிக்கல் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
Advertisement
Advertisement