தமிழகம்

நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தனியாக நின்று தவித்த இளம்பெண்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவரின் மகள் கஸ்தூரி. 20 வயது நிரம்பிய இ

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவரின் மகள் கஸ்தூரி. 20 வயது நிரம்பிய இவர் இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்துள்ளார். இதனையடுத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இளைஞருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி இரண்டு வருடங்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

ஆனால் விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னையிலேயே விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், இலங்கையில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக கஸ்தூரிக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து இலங்கைக்கு திரும்பிச் செல்ல நேற்று அதிகாலையில் அவர் ராமேசுவரம் அருகில் உள்ள தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஒரு நாட்டுப்படகு மூலம் கஸ்தூரி சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில்இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணல் திட்டில் தனியாக நின்று கொண்டு இருந்த கஸ்தூரியை கடலோர காவல் படையினர் படகில் ஏற்றி ராமேசுவரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விசா காலம் முடிந்து விட்டதால் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல தனது தாயார் ஏற்பாடு செய்த படகில் ஏறிச்சென்றதாக தெரிவித்தார். இதனையடுத்து அப்பெண்ணை இலங்கைக்கு அழைத்து செல்வதாக கூறி மீன்பிடி படகில் ஏற்றி மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement