தமிழகம்

நேற்று இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா! மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அதிகப்படியாக பரவும் கொரோனா!

Summary:

Police affected corona in chennai

 சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். துணை கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா நாளுக்குநாள் அதிகப்படியாக பரவியபடி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்த மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை, மாநிலம் முழுதும், இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 150க்கும் மேற்பட்ட போலீசாருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னை போலீசில் நேற்று 10 பேர் தாக்கப்பட்டனர். கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னை கோட்டை போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர், தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீஸ் ஏட்டு, ஓட்டேரி காவல் நிலையத்தில் 2 காவலர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.நகர் துணை கமிஷனர் ஏற்கனவே கொரோனா  தாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் மற்றும் அவரது கார் டிரைவர் பாதிப்புக்கு உள்ளானார். கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சென்னை போலீசில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டி 200-ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்களை கொடூர வைரஸ் தாக்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எனவே பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்து சமூக விலகலை முற்றிலுமாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நோய் முற்றிலும் ஒழிக்க முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.


Advertisement