நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பெட்டிகளை காவல் காத்த போலீஸ்காரருக்கு கொரோனா!



police-affected-corona-in-chennai

நடிகர் சங்க தேர்தல் ஒட்டுப்பெட்டிகளை காவல் காத்த போலீஸ்காரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகத்தை உலுக்கிவரும் கொரோனா வைரசால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா போராளிகளாக திகழ்ந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் என பலரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் போலீசார் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

corona

இந்தநிலையில், நடிகர் சங்க தலைவர் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பெட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடாஸ் சாலையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், வங்கி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளை பாதுகாக்கும் காவல் பணியில் இருந்த காவலர் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.