இரவில் சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்.! மதுரையில் நடந்த பேரதிர்ச்சி.!police-abused-women

மதுரையில் சினிமா சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் பைப் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் கடை உரிமையாளர் மற்றும் அவருடைய கடையில் பணியாற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஊழியர்கள் இரவு சினிமா பார்த்துள்ளனர்.

பின்னர் சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கடை உரிமையாளர் கடையில் பணியாற்றும் இளம்பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர், கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள் என விசாரித்துள்ளார்.

பின்னர் அவர் இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடன் அழைத்துச் சென்ற காவலர் அப்பெண்ணை மிரட்டி மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று மிரட்டி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். 

இந்தநிலையில், வீட்டில் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனையடுத்து  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது திலகர்திடல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் முருகன் என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர் முருகனை கைது செய்தனர்.