பிளஸ் 1 மாணவி கர்ப்பம்.! பிளஸ் 2 மாணவர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்.!

பிளஸ் 1 மாணவி கர்ப்பம்.! பிளஸ் 2 மாணவர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்.!


pocso-act-on-12th-class-student-near-nagercoil

நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டார் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுமியின் தந்தை விளையாட்டு பயிற்சியாளராகயிருக்கிறார். ஆகவே அவரிடம் விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஒருவர் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக, அந்த மாணவர் பயிற்சியாளரின் குடும்பத்தினரோடு நெருக்கமாக பழகத் தொடங்கினார்.

Nagarkovil

அந்த விதத்தில், பயிற்சியாளரின் மகளான 15 வயது சிறுமியுடன் அந்த +2 மாணவன் நெருக்கமாக பழகத் தொடங்கி, அதன் பிறகு இருவருக்குமிடையிலான பழக்கம் காதலாக மாறியது. இதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயிற்சியாளரின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அந்த பிளஸ் 2 மாணவரும், 15 வயது சிறுமியும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகு மாணவிக்கு அப்போது வயிற்று வலி ஏற்பட்டதால், நாகர்கோவில் பகுதியிலிருக்கின்ற ஒரு ஸ்கேன் சென்டரில் பரிசோதித்து பார்த்தபோது, மாணவி 8 மாதம் கர்ப்பமாகயிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

Nagarkovil

பின்னர் இந்த விவகாரம் குறித்து அந்த மாணவியிடம் அவருடைய தாய் விசாரித்தபோது, என்னுடைய கர்ப்பத்திற்கு 12ம் வகுப்பு மாணவன் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். அந்த சிறுமி இதனால் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியதன் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாகயிருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர்.