பொது தேர்வை புறக்கணிக்கும் பிளஸ் 2 மாணவர்கள்... கேள்விக்குறியாகும் எதிர்காலம்...!!



Plus 2 students who ignore public examination... questionable future...

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நடைபெற்று வரும் பொது தேர்வில் கணிசமான மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மார்ச் 13 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கில பாடத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இதை தொடர்ந்து நேற்று இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு  நடந்தது. 

இந்நிலையில், 47 ஆயிரம் மாணவர்கள் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனேவே நடந்த மொழிப்பாட தேர்வையும் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.