தமிழகம்

திடீரென மயங்கி விழுந்த நபர்.. பிரேத பரிசோதனையில் போது அதிர்ந்த மருத்துவர்கள்... மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்.!

Summary:

Piratha parisothanain pathu athirntha maruthuvarkal pin nigalntha paraparapu sambavam

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரை சேர்ந்தவர்கள் சுந்தர்(எ) சுதிர் - அருள்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். சுந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

அருள்செல்வி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்த சுந்தர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் சுந்தரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சுந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அவரது 
உயிர் தளத்தில் ரத்தம் இருந்துள்ளது. உடனே மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் அருள்செல்வியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது சுந்தர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரின் அந்த இடத்தில் அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் சுந்தர் எப்படி இறந்தார் என்பது தெரியும் என்பதால் அதில் வரும் தகவலை வைத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்த உள்ளனர்.


Advertisement