சொன்னதை செய்யாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.! செய்து அசத்துமா திமுக.! காத்திருக்கும் மருந்தாளுனர்கள்.!

சொன்னதை செய்யாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.! செய்து அசத்துமா திமுக.! காத்திருக்கும் மருந்தாளுனர்கள்.!


pharmacists-expecting-job-appointment

தமிழகத்தில், கடந்த ஆட்சியில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தமிழகத்தில் திறக்கப்படவுள்ள 2000 மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட போவதாக தெரிவித்தார். இதனால் படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியும், வேலை இல்லாமல், போதிய வருமானம் இன்றி வாழ்ந்த மருந்தாளுனர்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். 

ஆனால், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர் பணி இடங்களை குறித்து வாயை திறக்கவில்லை. இதனால் தமிழகம் எங்கும் உள்ள மருந்தாளுநர்கள் பெரும் வருத்தத்திற்கு ஆளாகினர். இந்த பணி கிடைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று நினைத்தவர்களின் வாழ்வு மீண்டும் இருளை நோக்கி செல்கிறதாக இணையத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.

Pharmacist

இந்தநிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. இதனால் வேலை இல்லாமல், போதிய வருமானம் இன்றி வாழ்ந்த மருந்தாளுனர்கள்  மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகமெங்கும் தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளில், மருந்தாளுநர் பணி இடங்கள் நிரப்படும் என்று முன்னாள் சுகாதார துறை அமைச்சரின் கூற்று நிறைவேற்றப்படாததால்,  கொரோனாவின் இரண்டாம் அலையில் மருந்தாளுனர்களின் சேவை தடைப்பட்டுள்ளது. 

எனவே  நிலைமையை கருத்தில் கொண்டு  ஒப்பந்த அடிப்படையிலாவது பணி இடங்களை நிரப்பிட தமிழ்நாடு பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் சங்க மாநில தலைவர் D. கார்த்திக் மற்றும் மாநில செயலாளர் சோ.வசத்குமார் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியும், வேலை இல்லாமல், போதிய வருமானம் இன்றி வாழ்ந்து வரும் மருந்தாளுனர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.