2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர்.! அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.! ஏக்கத்தில் மருந்தாளுநர்கள்!

2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர்.! அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.! ஏக்கத்தில் மருந்தாளுநர்கள்!



Pharmacist association request to job appointment

தமிழக அரசு டிசம்பர் 15ல் தொடங்கப்போகிற மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்க போவதாக செப்டம்பர் மாதம் குறிப்பிட்டு இருந்தது. மருந்தியல் சட்டம் 1948 ன் படி மருந்தாளுநர்களை தவிர வேறு ஒருவரும் மருந்தை கையாளவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. அது சட்டப்படி தவறு. இந்தநிலையில் இதனை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. 

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் அந்த  2000 மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட போவதாக தெரிவித்தார். இதனை நம்பி படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியும், வேலை இல்லாமல், போதிய வருமானம் இன்றி வாழ்ந்த மருந்தாளுனர்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். 

Pharmacist
ஆனால், கடந்த சனிக்கிழமை தமிழக முதல்வர் அவர்கள் அளித்த பேட்டியில், டிசம்பர் 15ல் தொடங்கப்பட உள்ள மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர் பணி இடங்களை குறித்து குறிப்பிடாதது தமிழக எங்கும் உள்ள மருந்தாளுநர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த பணி கிடைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று நினைத்தவர்களின் வாழ்வு மீண்டும் இருளை நோக்கி செல்கிறதாக இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்தநிலையில் மருந்தியல் சட்டம்  1948 ஐ நடைமுறை படுத்தவேண்டியது அரசின் கடமை. இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்தாளுனர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்ச்சியாக தவிர்க்கப்படுவதாகவும், இனியாவது இந்த வேலை வாய்ப்பை உறுதி செய்து சட்டத்தையும், மருந்தாளுநர்களையும் அரசு காக்குமா? என்ற கேள்வியுடன் தமிழ்நாடு பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் சங்கம் (TNRPA) சென்னை கோரிக்கை வைக்கிறது.