
petrol-diesel-rate-in-chennai-today
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில் எந்த மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.75ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 48 நாட்களுக்கு பிறகு இப்படியொரு உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால் டீசல் விலை தொடர்ந்து 21வது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement