எங்கள் ஊரை காக்கவந்த சாமி... பூமிக்கு அடியில் பழங்கால பெருமாள் சிலை.! பொதுமக்கள் அதிரடி முடிவு.!

கடலூர்மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தில் ராம நிர்வாக அலுவலக கட்டுமான பணிக்காக நேற்று முன்தினம் காலை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. குழி தோண்டியபோது சோழர்காலத்தை சேர்ந்த பெருமாள் சிற்பம் கிடைத்துள்ளது.
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த பெருமாள் சிலைக்கு பூ மாலைகள் அணிவித்து சூடம் ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர் .
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பெருமாள் சிலையினை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்ல முயற்சி செய்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் சிலையை எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த சிலை தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.