நடுரோட்டில் 2 பேரை துரத்தித்துரத்தி வெட்டிய 6 பேர் கும்பல்.. பெரம்பலூரில் நடந்த பயங்கரம்.., கதறிய நண்பர்கள்.!

நடுரோட்டில் 2 பேரை துரத்தித்துரத்தி வெட்டிய 6 பேர் கும்பல்.. பெரம்பலூரில் நடந்த பயங்கரம்.., கதறிய நண்பர்கள்.!


Perambalur Man Murder by 6 Man Gang

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், தேவேந்திர குல வேளாளர் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவரின் மகன் வினோத் (வயது 28). இவர் பெரம்பலூரில் இருக்கும் செல்போன் கடையில் வேலைபார்க்கிறார். இவரின் நண்பர் கார்த்திக் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்று மாலை நேரத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில், அவ்வழியே வந்த 6 பேர் கும்பல் இருவரையும் பயங்கர ஆயுதத்தால் துரத்த, உயிரை கையில் பிடித்தவாறு இருவரும் வெவ்வேறு திசையில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இருவரையும் துரத்தி சென்ற கும்பல் வினோத் குமாரை சரமாரியாக வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பி சென்றது. கார்த்திக் மட்டும் எப்படியோ தப்பி சென்றுவிட்டார். 

Perambalur

வெட்டு காயங்களால் உயிருக்கு போராடிய வினோத் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மகனின் உடலை பேரவந்த வினோத்தின் தாயார் மல்லிகா மற்றும் அவரின் நண்பர்கள் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.