ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்; என்ன காரணம் தெரியுமா?

ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்; என்ன காரணம் தெரியுமா?



people-on-strike-at-ramanathapuram-despite-lockdown

இராமநாதபுரம் லாந்தை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒருசில அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டுகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரத்தில் ஏற்கனவே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 440 படுக்கைகள் கொண்ட கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ramanathapuram

இந்நிலையில் லாந்தை பகுதியில் உள்ள தனியார் பொறியியற் கல்லூரியில் கரோனா சிகிசிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்களிடம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதனால் லாந்தை, எல்.கருங்குளம், கன்னண்டை, அச்சங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று கல்லூரி முன்பு முற்றுகையிட்டு, மதுரை-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர்.