தமிழகம் Covid-19

ஊரடங்கையும் மீறி சாலையில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்.! ஒரே நாளில் கேள்விக்குறியான சமூக விலகல்.!

Summary:

People gathered to buy groceries during lock down in chennai

சென்னை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இன்று காலை கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் சாலையில் கூட்டமாக கூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்படுமோ என்ற பயத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, கொரோனா குறித்த அச்சத்தையும் மறந்து ஆயிர கணக்கான மக்கள் சாலையில் கூட்டியுள்ளனர்.

இதுகுறித்து பிரபல இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள்
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது.

காலை சென்னை கேகே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகை கடைகளும் காய்கறி கடைகளும் நிறைந்து வழிந்தன.போக்குவரத்து நெரிசலே ஏறபட்டுவிட்டது. கொரோனோ நம்மை தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதட்டமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன்.

காலை 8 . 30 மணிக்கு சிறிய காய்கறிக்கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள். மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூகவிலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பது தான் வருத்தம் தருகிறது. என பதிவிட்டுள்ளார்.


Advertisement