தமிழகம்

பஸ்சில் பட்டா கத்தியுடன் சென்ற மாணவர்கள்! காவல் நிலையத்தில் தர்ம அடிகொடுக்கும் பெற்றோர்! - வீடியோ உள்ளே!

Summary:

Parents warned their sons who misbehaved on bus yesterday

பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கையில் பட்டா கத்தியை வைத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று நடந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சென்னை பிராட்வேயில் இருந்து காரனோடைக்குச் செல்லும் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர்  பட்டா கத்திகளை கையில் வைத்துகொண்டு பயணம் செய்தனர்.
 
மேலும் அவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டு கையில் வைத்திருந்த கத்தியை சுழற்றியும் ,சாலையில் உரசி தீ பிடிக்க வைத்தும் அச்சுறுத்தினர். இதனால் பேருந்தில் பயணம் செய்வதில் மக்கள் மிகவும் பயத்துடனும் சிரமத்துடனும் காணப்பட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டதில் மாநில கல்லூரி மாணவர் ஆனந்தராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் பேரில் மாணவர்கள் ரவி, ராஜா, தாமோதரன், ஆனந்தராஜ், சிவா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் அந்த மாணவர்கள் நாங்கள் இனி இவாறு செய்ய மாட்டோம் என்று கெஞ்சி மன்றாடினார். மேலும் அவர்களது பெற்றோர்களே அவர்களை காவல் நிலையத்தில் வைத்து வெளுத்து வாங்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.