இந்தியா

ஊரடங்கால் பறிபோன வேலை! பணத்திற்காக பச்சிளங்குழந்தையை விற்ற தம்பதியினர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Parents sold 2 month baby

ஹைதராபாத் ஜீதிமெட்லா என்ற பகுதியை சேர்ந்தவர் மதன் சிங். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மற்றொரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவிவரும்  நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி உணவில்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறே தினக்கூலியான, குடிப்பழக்கத்திற்கு அடிமையான மதன் சிங்கும்  பணத்திற்காக பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வருமானம் எதுவும் இல்லாத நிலையில், அவர் தனது பக்கத்துவீட்டில் குழந்தையில்லாமல் வசித்துவந்த சேகு என்பவருக்கு தனது 2 மாத குழந்தையை 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்த நிலையில், அவர்கள் விரைந்து குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் குழந்தையை விற்றவர், வாங்கியவர் என அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement