தமிழகம்

டேய்.! யப்பா..! பசிக்கிதுடா..! 3 மகன்கள் இருந்தும் உணவுக்கு வழியின்றி பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!

Summary:

Parents commit suicide after their sons left them alone

மூன்று மகன்கள் இருந்தும் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் அவதிப்பட்ட வயதான பெற்றோர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர்கள் மச்சக்காளை - பசுபதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் அனைவர்க்கும் திருமணம் முடிந்து தனி தனியே வசித்துவருகின்றனர். இதில் ஒரு மகன் கோவையிலும், ஒருவர் சவுதியிலும் மற்றொருவர் மதுரையிலும் வசித்து வருகின்றனர்.

மதுரையில் இருக்கும் மகனின் வீட்டின் மாடியில் வயதான பெற்றோர் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன்களின் ஆதரவு இல்லாமல் இருவரும் சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்படுவந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர்கள் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வண்டஹ் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement