அரசியல் தமிழகம்

புதுக்கோட்டை மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் ஏன் திமுகவில் இணைந்தார்?

Summary:

parani karthikeyan join in DMK


அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் அணி மாறத் தொடங்கினர். ஆனாலும் கட்சி மக்களை மட்டுமே நம்பியுள்ளது என்ற கொள்கையுடன் தொடர்ந்து கட்சியை நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி,  திமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்.

இந்தநிலையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 

அதிமுக-வில் இருந்த பரணி கார்த்திகேயன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அந்த நேரத்தில் பரணி கார்த்திகேயனுக்கு புதுக்கோட்டை மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பரணி கார்த்திகேயன், திமுக தலைமை எனக்கு மிகவும் பிடித்து. அதன் காரணமாக எந்தவித நிபந்தனையும் இன்றி திமுகவில் இணைந்துள்ளேன். விரைவில் புதுக்கோட்டையில்
மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநாட்டில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் வருவதாக கூறியுள்ளார்.

அமமுகவில் என்ன பிரச்சனை என்பதை அந்த மாநாட்டில் தெரிவிப்பேன். என்னைப் போல் இன்னும் ஏராளமானோர் புதுக்கோட்டை அமமுகவில் இருந்து திமுகவில் இணையவுள்ளனர் என்று கூறினார். இதுவரை எதற்காக திமுகவில் இணைந்தேன் என பரணி கார்த்திகேயன் கூறாததால் புதுக்கோட்டை மாவட்ட அமமுக தொண்டர்கள் பெரும் குலாப்[பதில் உள்ளனர்.


Advertisement