உறவினர்களிடையே தகராறு; மர்மநபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு பெயிண்டர் கொலை: அதிர்ச்சி பின்னணி..!painter-murdered-in-family-dispute-near-dindigul

திண்டுக்கல் அருகே உறவினர்களுக்குள் நடந்த தகறாரில் வீட்டில் வைத்து பெயிண்டர் மர்மநபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகன் பிரபாகரன் (20). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரபாகரன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது, பிரபாகரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை இரவு  தனது வீட்டிற்கு திரும்பிய பிரபாகரன் வீட்டில் படுத்து துங்கிக்கொண்டிருந்தார். அப்போது,  வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பிரபாகரனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.

காலையில் வீட்டில் பிரபாகரன் பிணமாக கிடப்பதை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில்  திண்டுக்கல் டவுன் மேற்கு காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பிரபாகரனின் தாய் முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் டவுன் மேற்கு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.