தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.! கடைகளை அடைக்க தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு.!ordered-to-close-large-stores

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தமிழகத் தலைமைச் செயலாளர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

corona

அந்த அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.