அரசியல் தமிழகம்

2021-ன் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தான்.! பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்!

Summary:

ops supporters poster for ops

கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். இதனையடுத்து எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இந்தநிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, நிரந்தர முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் அவர்தான், தமிழக நிரந்தர முதல்வர் என்றும் போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது. தேனி மாவட்ட கொஞ்சம் பட்டி கிராம மக்கள் தங்களது ஆதரவை போஸ்டர் ஒட்டி வெளிப்படுத்தியுள்ளனர்.


Advertisement