வீட்ல யாருங்கய்யா.. கொஞ்சம் சோறு இருந்தா தங்களேன்., பசிக்குது.. நள்ளிரவில் கதவை தட்டிய கரடி.. பதறிப்போன மக்கள்.!

வீட்ல யாருங்கய்யா.. கொஞ்சம் சோறு இருந்தா தங்களேன்., பசிக்குது.. நள்ளிரவில் கதவை தட்டிய கரடி.. பதறிப்போன மக்கள்.!


Ooty bear Issue

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருக்கும் யானை, கரடி, காட்டெருமை போன்ற பல வனவிலங்குகள் அவ்வப்போது  உணவுகளை தேடி பயணிக்கும் போது, தங்களின் பழைய வாழ்விடமாக இன்றைய குடியிருப்புகளுக்குள் வந்து செல்வது வழக்கம். சில நேரங்களில் யானைகளால் விலை நிலங்கள் சேதப்படுத்தப்படும். ரேஷன் கடை உடைத்து நொறுக்கப்படும். அனைத்தும் அவை உணவுக்காக செய்து வருகின்றன. 

இந்த நிலையில், ஊட்டியில் உள்ள ஜெகதளா கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் கரடி புகுந்துள்ளது. இந்த கரடி நீண்ட நேரமாக அப்பகுதியில் சுற்றிவந்த நிலையில், அங்குள்ள மளிகை கடை மற்றும் வீட்டின் கதவுகளை தட்டி உணவுக்காக அலைந்து திரிந்துள்ளது. யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று கதவருகே வந்து நின்று பார்த்தவர்களுக்கு கரடி இருந்துள்ளது. 

சுமார் 1 மணிநேரம் பல வீடுகளின் கதவை தட்டி உணவு கேட்டுப்பார்த்த கரடி, ஏமாற்றத்துடன் வனத்திற்கு சென்றது. கரடி சென்றதும் மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டாலும், சிலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் கரடியின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.