தமிழகம்

சுடுதண்ணீர் போட்ட தாய்..! வாட்டர் ஹீட்டரில் கைவைத்த ஒன்றரைவயது குழந்தை..! பரிதாபமாக பறிபோன உயிர்..!!

Summary:

One nad half years child dead when touch water header near thirupathur

சுடுதண்ணி போடுவதற்காக வைத்திருந்த வாட்டர் ஹீட்டரில் ஒன்றரை வயது குழந்தை கை வைத்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. அவரது கணவர் புருசோத்தமன். இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் தற்போது ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தனது குழந்தையுடன் மேல் பள்ளிப்படில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். தாய் வீட்டில் தங்கியிருந்த பவித்ரா இன்று காலை குளிப்பதற்காக சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விட்டு, தண்ணீரை வெப்பபடுத்துவதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் கருவியை பாத்திரத்தில் வைத்துள்ளார். பின்னர் சமையல் வேலை பார்ப்பதற்காக பவித்ரா சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை அனன்யா வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்த பாத்திரத்தில் கை வைத்த நிலையில் மின்சாரம் தாக்கி மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து குடம் கீழே விழும் சத்தம் கேட்டு ஓடி வந்த பவித்ரா மற்றும் அவரது உறவினர்கள் குழந்தை மயங்கி கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

உடனே குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு பவித்ரா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டரில் கை வைத்து ஒன்றரை வயது குழந்தையை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement