தமிழகம்

சளி, இருமலுடன் சாலையில் மயங்கி கிடந்த முதியவரை உயிரோடு பிணவறை அருகில் தூக்கி வீசிய பொதுமக்கள்..! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

Old man thrown to mortuary by people for corono fear

கொரோனா அச்சம் காரணமாக சாலையில் சளி, இருமலோடு இருந்த முதியவர் ஒருவரை  பொதுமக்கள் சிலர் மருத்துவமனையின் பி ணவறையின் பக்கத்தில் தூக்கி வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் அருகே வயதான முதியவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். மேலும், அவர் தொடர்ந்து இருமிக்கொண்ட இருந்ததாகவும், அவருக்கு சளி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்த முதியவரை அரசு மருத்துவனையின் பக்கத்தில் இருந்த பிணவறைப் பக்கத்தில் போட்டு சென்றுள்ளன்னர்.

இதனிடையே அனாதையாக கிடந்த அந்த முதியவரை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அந்த காட்சி மதுரை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு சென்றுள்ளது. உடனே முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து, அந்த முதியவர் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 60 வயதான டெய்லர் முகமது எனத் தெரியவந்துள்ளது. இவரது காலில் புண் ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. மேலும், முதியவருக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை இருப்பதால் அவர் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


Advertisement