தமிழகம்

சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலி.! முதியவர் எடுத்த விபரீத முடிவு.! துயரச்சம்பவம்.!

Summary:

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்ற முதியவர் தனது மகன் கணேஷ் பராமரிப

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்ற முதியவர் தனது மகன் கணேஷ் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அபிமன்னன் சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமணியில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

தனது வலியை வெளியில் சொல்லமுடியாமல் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் அலைந்துவந்த அபிமன்னன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அபிமன்னனை தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது உருவையாறு சளியில் உள்ள இறைச்சி விற்கும் கடையில் அபிமன்னன் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். அவருக்கு இருந்த சர்க்கரை நோய், தீராத தலைவலி காரணமாக அபிமன்னன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement