தமிழகம்

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த முதியவர்!. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள்!.

Summary:

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த முதியவர்!. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ந்துபோன பெற்றோர்கள்!.

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார், பதறிப்போன பெற்றோர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். மருத்துவரின் பதிலை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். இந்தநிலையில் வயிற்றுவலியால் துடித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, 48 வயது நிரம்பிய அக்கீம் என்பவர் தன்னை சீரழித்ததாகவும், இதைப்பற்றி யாரிடமும் சொன்னால் தன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டினார் என்றும் கண்ணீருடன் கூறினார் அந்த சிறுமி.

பின்னர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், அக்கீம் பெயிண்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது.

 இதனையடுத்து அக்கீம் என்பவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையின் தேடுதல் அறிந்து, தலைமறைவாக இருந்த அக்கீமை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Advertisement