16 வயது சிறுமியின் மீது ஆசைப்பட்ட 66 வயது தாத்தா! சிறுமிக்கு எழுதிய காதல் கடிதம்! கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்!

old man love letter for young girl


old man love letter for young girl


கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா. இவருக்கு வயது 66. இவர் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி வெளியில் வரும்போதெல்லாம் முகமது பீர் பாஷா தவறான கண்ணோட்டத்தோடு பார்த்துள்ளார். இந்தநிலையில் தாத்தாவுக்கு சபலம் ஏற்பட்டு அந்த சிறுமிக்கு கடிதம் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு ஓகே வா என்று நேரடியாகவே அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, உடனடியாக அந்த கடிதத்தை தனது தாயிடம் கொடுத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தனது உறவினர்களிடம் அந்த கடிதத்தை காட்டியுள்ளார்.

love letter

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அந்த தாத்தாவை சந்தித்து கண்டித்துள்ளனர். ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல், மீண்டும் சிறுமியை சந்தித்து, நான் தந்த கடிதத்திற்கு என்ன பதில்? என்று கேட்டு மிரட்டி உள்ளார். 

இதனால் பயந்துபோன சிறுமி, வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்துள்ளார். இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை போலீசார் விசாரித்ததில், சிறுமியை மிரட்டியது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் முகமது பீர் பாஷாவை சிறையில் அடைத்துள்ளனர்.