தூங்க முடியலடா.. கேம் விளையாடாதீங்க....! உச்சகட்ட கோவத்தில் சிறுவனின் கையை அரிவாளால் வெட்டிய முதியவர்.!

தூங்க முடியலடா.. கேம் விளையாடாதீங்க....! உச்சகட்ட கோவத்தில் சிறுவனின் கையை அரிவாளால் வெட்டிய முதியவர்.!


old man attacked young boy

குழந்தைகள் ஓடியாடி தெருவில் விளையாடிய காலம் மாறி, தற்போது ஒரே இடத்தில் அமர்ந்து செல்போனை வைத்தே சிறுவர்கள் விளையாடும் காலம் வந்து விட்டது. அதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் சிறுவர்கள் காலை எழுந்தது முதல் இரவு துாங்க செல்லும் வரை அலைபேசியில் வீடியோ கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். 

இந்தநிலையில் சிறுவர் ஒருவர் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் பப்ஜி விளையாடி இடையூறு செய்து வந்ததால் அந்த சிறுவனின் கையை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பாறைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக். 19 வயது நிரம்பிய அந்த சிறுவன் அரசு ஐ.டி.ஐ.,யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கார்த்திக் சம்பவத்தன்று இரவு அவரது நண்பர்களுடன் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார். 
 
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கின் கையை வெட்டியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து ராமசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.