ஆபாச வீடியோ காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை! விசாரணையில் வெளிவந்த உண்மை! அ.தி.மு.க. பிரமுகர் கைது!

ஆபாச வீடியோ காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை! விசாரணையில் வெளிவந்த உண்மை! அ.தி.மு.க. பிரமுகர் கைது!


old man arrested for abused


சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம், செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்துவந்த அதிமுக  பிரமுகரான இவர், தனது தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் 13 வயது சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Abuse

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் செல்போனில் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் துறையினர் ரவியை கைது செய்தனர். 

போலீசார் ரவியிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.  இதையடுத்து ரவி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.