தமிழகம்

செல்லாத நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு ரூ.46 ஆயிரம் செக் வழங்கிய அறக்கட்டளை!

Summary:

Old age sisters old money issue status

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை அடுத்து உள்ள பூமலூர் என்னும் ஊரை சேர்ந்தவர்கள் சகோதரிகளான ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள். இவர்களுக்கு 75 வயதான நிலையில் கணவர்கள் இல்லை. இருவரும் தத்தம் மகன்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரி இல்லாமல் போனதை அடுத்து மகன்கள் இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்துவந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல சிகிச்சைக்கு தங்களிடம் போதிய பணம் இல்லை என்பதால், தாயாரிடம் ஏதேனும் பணம் உள்ளதா என மகன் கேட்க. தாங்கள் சேமித்து வைத்திருந்த 46,000 ரூபாய் பணத்தை மகன்களிடம் கொடுத்துள்ளனர் சகோதரிகள்.

இதனை அடுத்து பணத்தை வாங்கி பார்த்த மகன்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மூன்று வருடத்திற்கு முன்பு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விஷயம் தெரியாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் சேமித்து வைத்திருந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வயதான அந்த சகோதரிகளின் மருத்துவச் செலவு மற்றும் உதவித்தொகைக்கான ஆணையைப் பிறப்பித்தார். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்டளையின் தாளாளர் புருஷோத்தமன், முதியவர்களிடம் 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


Advertisement