முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்.! நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் கைது.!

முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்.! நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் கைது.!


NTK member arrested

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தநிலையில். ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், இந்த ஹெலிகாப்டகர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த சம்பவத்தில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் பாலசுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன், குன்னூர் விபத்து குறித்து தமது வலைதளப் பக்கங்களில் தவறாக பதிவிட்டிருப்பதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பதிவுகள் போட்டிருப்பதாகவும் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.