அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களுடன் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் பரிதாப மரணம்!

அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களுடன் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் பரிதாப மரணம்!



NTK Election candidate died in accident


தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். 36 வயது நிரம்பிய இவர் நாம் தமிழர் கட்சியின் கடமலை மற்றும் மயிலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். 

சமீபத்தில் நடந்து முடிந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடமலை மற்றும் மயிலை ஒன்றிய 10வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவருடன் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டிருந்தனர்.

அங்கு முதல் கட்டமாக கடந்த 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் குபேந்திரன் மற்றொருவருடன் சென்று கொண்டிருந்தார். 

NTK

அப்போது கோரையூத்து என்னுமிடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி குபேந்திரன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற முருகன் என்பவருக்கு காயம் ஏற்பட்டு  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

விபத்துக்குறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குபேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தங்கவேல் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.