பணம் கேட்டு பேக்கரியை அடித்து உடைத்த 2 நாம் தமிழர் நிர்வாகிகள் கைது.!

5000 ரூபாய் பணம் கேட்டு பேக்கரியை அடித்து உடைத்த 2 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரபிக். இவர் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுண்டம்பட்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கருணாகரன் மற்றும் நிர்வாகி சக்திவேல் பேக்கரிக்கு சென்று ஏரி, குளம் தூர்வார ரூ.5000 நிதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு ரபிக் ரூ.500 தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் மற்றும் சக்திவேல் பேக்கரி அடித்து உடைத்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சம்பவம் இடத்துக்கு பிரிந்து சென்ற போலீசார் கருணாகரன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.