தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!



not permision to vel yatra

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரைவேல் யாத்திரை நிகழ்ச்சி நடந்த பாஜக திட்டமிட்டிருந்தது. பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறும் என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் அறிவித்தார்.

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

bjp

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.