சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வட மாநில வாலிபர் கைது..!!



North State youth arrested for cheating and raping girl..

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் அவரது கணவர் காலமானதால், தனது 15 வயது மகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

அவரது பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமிக்கும், அர்ஜூன்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதி தனது தாயிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி இரவில் வீடு திரும்பவில்லை.

உறவினர் வீட்டில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. மறுநாள் அந்த வீட்டுக்கு வந்த சிறுமி, அர்ஜூன்குமார் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஆகியோர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அர்ஜூன்குமாரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.