அரசியல் தமிழகம்

அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.! கருத்து தெரிவித்த நமது எம்.ஜி.ஆர்.!

Summary:

சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்போதைய அதிமுக தலைமை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்து வருகிறது. அதேபோல் சசிகலாவை வரவேற்று பேனர், போஸ்டர்கள் வைத்த அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியிட்டப்பட்டுள்ள கட்டுரையில், எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து துரோக கூட்டங்கள் நடத்தினாலும் அவை புஸ்வானம் ஆகிவிடும்.

 சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விசுவாசம் இதுதானா? பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோருக்கு நாவடக்கம் வேண்டும். சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது. உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்பவர்கள் வரலாற்றில் நம்பிக்கை துரோகிகள் என்றே அழைக்கப்படுவர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக - அமமுக இணைப்போ, சசிகலாவை சேர்க்கவோ வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக எஃகு கோட்டை என்பதால் யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார். நமது எம்.ஜி.ஆரில் வெளியான கட்டுரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


Advertisement