ஆற்றில் ஆபத்து செல்பி.. பெண் எஞ்சினியரின் உயிரை காவு வாங்கிய கல்லட்டி.. தொடரும் மர்மங்கள்..!

ஆற்றில் ஆபத்து செல்பி.. பெண் எஞ்சினியரின் உயிரை காவு வாங்கிய கல்லட்டி.. தொடரும் மர்மங்கள்..!


nilgiris-ooty-woman-software-engineer-died-taking-selfi

ஊட்டிக்கு சுற்றுலா வந்த பெண் மென்பொறியாளர் ஆறில் செல்பி எடுக்க முயற்சித்து பலியான சோகம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் வசித்து வருபவர் வினிதா சௌதாரி (வயது 26). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவ்வார விடுமுறையை இன்பமாக கழிக்க 9 நண்பர்களுடன் ஊட்டிக்கு வந்துள்ளார். 

இவர்கள் அனைவரும் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை நேரில் சென்று கண்டுகளித்த நிலையில், கல்லட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்தனர். நேற்று மாலை நேரத்தில் கல்லட்டி ஆற்றினை பார்க்க அனைவரும் புறப்பட்டு சென்றுள்ளனர். 

அங்கு, 20 ஆவது கொண்டை ஊசி வளைவருகே இருந்தவாறு ஆற்றின் அழகை கண்டுகளித்த நிலையில், வினிதா ஆறு அருகே செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி விழவே, கல்லட்டி ஆற்றுக்குள் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளத்தில் பிடியில் வினிதா சிக்கிக்கொண்டார். 

தோழியை காப்பாற்ற இயலாமல் அனைவரும் அபயக்குரல் எழுப்ப, அப்பகுதி மக்கள் புதுமந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரின் உடல் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவம் சுற்றுலா வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்லட்டி பகுதியில் பல ஆபத்தான பகுதிகள் உள்ளது என்று தெரிந்தும் விடுதி மற்றும் வேன் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளை தவறான பாதையில் அழைத்து சென்று சோகத்தை ஏற்படுத்துவதாக குற்றசாட்டுகள் உள்ளூர் மக்களால் முன்வைக்கப்படுகிறது.