குன்றத்தூர் அபிராமியாக நீலகிரி கீதா?...! 1 வயது பச்சிளம் குழந்தைக்கு உணவுடன் மது கொடுத்து கொடூர கொலை.! பேரதிர்ச்சியில் தமிழகம்.!

குன்றத்தூர் அபிராமியாக நீலகிரி கீதா?...! 1 வயது பச்சிளம் குழந்தைக்கு உணவுடன் மது கொடுத்து கொடூர கொலை.! பேரதிர்ச்சியில் தமிழகம்.!


Nilgiris Mother Killed 1 Year Aged Baby she Affair Many Persons

இரண்டு திருமணம் செய்து கணவரை பிரிந்து, 3 ஆவது கணவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளை பெற்றெடுத்தும் ஆசை தீராத பெண்மணி, கள்ளகாதலர்களுடன் பிசியாக இருக்க குழந்தையை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நீலகிரியை அதிர வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கீதா (வயது 38). இவரின் கணவர் கார்த்திக் (வயது 40). தம்பதிகளுக்கு நித்தீஷ் (வயது 3), நித்தின் (வயது 1) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதிகளுக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு தகராறு வாடிக்கையாகியுள்ளது. 

இதனால் கணவன் - மனைவி பிரிந்த நிலையில், கார்த்திக் தனது குழந்தை நித்தீஷுடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். கீதா தனது கைக்குழந்தை நித்தினுடன் வண்ணாரப்பேட்டையில் இருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் 14 ஆம் தேதி கைக்குழந்தை மயங்கி விழுந்ததாக தெரியவருகிறது. 

இதனையடுத்து, கீதா குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறப்பை உறுதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஊட்டி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அதிர்ச்சி திருப்பமாக காவல் துறையினருக்கு பகீர் தகவல் கிடைத்துள்ளது. 

Nilgiris

கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர்கள் இருவரையும் புரிந்துள்ளார். அப்போது, கார்த்திக் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்படவே, அவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையில், கீதா பலருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கைக்குழந்தையை கவனிக்காமல், கள்ளக்காதலர்களுடன் உல்லாசம், போனில் பேச்சு என இருந்துள்ளார்.

இவர்களின் கள்ளக்காதல் உல்லாச வாழ்க்கைக்கு கைக்குழந்தை இடையூறாக இருந்து வந்ததாக எண்ணிய நிலையில், குழந்தையை கொலை செய்துவிடலாம் என்ற விபரீத எண்ணம் கீதாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குழந்தையின் வாயில் அதிகளவு உணவை திணித்து, மதுவை ஊற்றி கொலை செய்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 

குழந்தையின் இறப்பை உறுதி செய்த கீதா, தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அழுதுகொண்டே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். கீதாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.