அட..எவ்ளோ பெரிய மனசு! திருமணம் முடிச்ச கையோடு, புதுமண ஜோடி செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!

அட..எவ்ளோ பெரிய மனசு! திருமணம் முடிச்ச கையோடு, புதுமண ஜோடி செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!


newlyweds give money to corono preventing activities

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் ஹரிபாஸ்கர். இவர் நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, திருமணம் மே 17-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. அதனை தொடர்ந்து  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹரிபாஸ்கர் மற்றும் சாருமதி ஜோடிக்கு குடும்பத்தினர் திருமணத்தை மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.

corono

பின்னர் அவர்கள் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்த 51,000 ரூபாயைத் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து , திருமணம் முடித்த கையோடு உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று புதுமண ஜோடியினர் அந்த பணத்தை வழங்கியுள்ளனர். மேலும் இந்த நிதியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் செயலுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.