24 வயசுதான் ஆகுது..! கல்யாணம் முடிஞ்சு பல கனவுகளுடன் கணவன் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஒன்றை மாதத்தில் நடந்த துயர சம்பவம்.!

Newly married girl killed by strangers near Virudhunagar


Newly married girl killed by strangers near Virudhunagar

திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்தில் புது பெண் ஒருவர் மர்மநபர்களால் கொலைசெய்யப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பெரியார் காலனி  பகுதியை சேர்ந்தவர் செல்வபாண்டியன். 26 வயதாகும் இவருக்கும், சத்யா நகரை சேர்ந்த பிரகதி மோனிகா(24) என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்து ஆசையோடு குடும்ப வாழ்க்கையை தொடங்கிய பிரகதி மோனிகா சம்பவ தினத்தன்று வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

எதேச்சையாக அக்கம் பக்கத்தினர் பிரகதி மோனிகாவின் வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடப்பது தெரியவர, வேளைக்கு சென்ற அவரது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு விரைந்துவந்த செல்வபாண்டியன் தனது புது மனைவியின் உடலை பார்த்து கதறிஅழுத்துள்ளார்.

Crime

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பிரகதி மோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். புதுப்பெண் வீட்டில் இருந்ததை அறிந்து மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் உயிரிழப்பதற்கு முன் பிரகதி மோனிகா அவர்களுடன் வெகுவாக போராடி இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.